Tuesday, 25 August 2015

பாரதி நர்சரி & பிரைமரி ஸ்கூல் சார்பாக நடை பெற்ற 69 சுதந்திர தின நிகழ்ச்சி மற்றும் கிராத் போட்டி

பாரதி நர்சரி & பிரைமரி ஸ்கூல் (இமாம் அபு ஹனிபா(ரஹ்) டிரஸட் )
சார்பாக நடை பெற்ற 69 சுதந்திர தின நிகழ்ச்சி மற்றும் அனைத்து பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் கிராத் போட்டி சிறப்பாக நடைபெற்றது.

முதல் பரிசு உஸ்வதுல் ஹஸனா இன்டர் நேஷனல் பள்ளி மாணவர் அய்ஷர் முதல் பரிசு ரூ 1000 / பெற்றார்.

உஸ்வ்துல் ஹஸனா ஓரியண்டல் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி அர்ஷியா பாத்திமா இரண்டாவது பரிசு ரூ 750

மற்றும்

பள்ளிபட்டி மேல்நிலை பள்ளி மாணவர் உமர் சல்மான் மூன்றாவது பரிசு ரூ 500 பெற்றார்கள்.

நிகழ்ச்சிக்கு கூலச்சி முஹம்மது அலி ஹாஜியார் தலைமையேற்றிருந்தார்

சமூக ஆர்வலர் கீரனூர் அன்வர் அலி ஹாஜியார் முன்னிலை வகித்தார்.

மாணவர் முஹம்மது அபு ஹனிபா கிராத் ஓத நிகழ்ச்சி இனிதே ஆரம்பமானது. மௌலவி அப்துல் ஹமீது ஹஸனி காஸிமி வரவேற்று பேசினார், சிறப்பு விருந்தினர் தோழர் திரு N. ராஜா சேர்வை (அரவை காவல் உதவி ஆய்வாளர் ) கொடியேற்றினார்.

போட்டியின் நடுவராக மேற்கு பள்ளி தலைமை இமாம் மௌலவி சிராஜுதீன் காஷிபி மற்றும் மௌலவி அல்தாஃப் ஹஸனி, மௌலவி தானிஷ் ஹஸனி, பரிசுக்குரிய மாணவர்களை தேர்ந்தெடுத்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் சாகுல் ஹமீது,உதவி ஆசிரியர் பிரபு மற்றும் முஹம்மது மீரான் ஹஸனி அறிமுக உரை ஆற்றினர்.

கிழக்கு பள்ளி இமாம் & ஜாமியா பேராசிரியருமான ஹபீப் முஹம்மது தாவூதி,நத்வி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

நன்றியுரையாக பள்ளி தாளாளர் ரிபாய்தீன் ஹஸனி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஏரளாமான ஊர் பொதுமக்கள் நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்தனர்...

விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில... 




Thursday, 16 April 2015

பாரதி பள்ளியின் 68-வது சுதந்திர தின விழா

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) ..

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி ஷா நகர் பள்ளிவாசல் அருகில் அரசு அங்கீகாரம் பெற்ற பாரதி நர்சரி & பிரைமரி ஸ்கூல் LKG முதல் 5-ஆம் வகுப்பு வரை அரசு பாடதிட்டத்துடன் இஸ்லாமிய நெறி முறையில் சிறப்பான முறையில் நடை பெற்று வருகின்றது.

வரும் கல்வியாண்டிற்கான அட்மிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 



நமது பள்ளி சார்பாக 2014-15 நடந்த 68-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் போது பள்ளப்பட்டி கிராம நிர்வாகி (VAO ) பழனிச்சாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றி வைத்தார்.

மவுலவி  அல் ஹாபில் ஹபிப்  முஹம்மது நத்வி (ஜாமியா பேராசியார் & கிழகுப்பள்ளி தலைமை இமாம்) அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினார்கள்.








சாதித்ததில் சிறந்தவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுக்களும் வழங்கப்பட்டன.




பார்வையிழந்த நிலையிலும் குர்ஆனை மனனம் செய்த (ஹாபிழ்) ஒருவர் பரிசு பெரும் காட்சி.